/ தினமலர் டிவி
/ பொது
/ கலகமூட்ட பார்க்கும் ராகுல் - ஸ்டாலின் திட்டம் எடுபடாது Vanathi BJP MK stalin
கலகமூட்ட பார்க்கும் ராகுல் - ஸ்டாலின் திட்டம் எடுபடாது Vanathi BJP MK stalin
மக்கள் ஆதரவுடன் பாஜவை வீழ்த்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு என பொய் கூறி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி உள்ளார். பீகாரில் ராகுல் நடத்திய யாத்திரையில் முதல்வர் .ஸ்டாலினும் பங்கேற்றிருக்கிறார். குடும்ப கட்சிகளின் கூடாரமான இண்டி கூட்டணி கட்சிகள் அரங்கேற்றும் இந்த யாத்திரை நாடகத்திலும் வாரிசு தலைவர்களே ஒன்று கூடி உள்ளனர். பீகார் உள்ளிட்ட மாநிலங்களை மாட்டு மூத்திர மாநிலங்கள் என பார்லியில் இழிவுபடுத்தியவர் திமுக எம்பி செந்தில்குமார்.
ஆக 27, 2025