உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலினை பணியவைத்த இந்து எழுச்சி: வானதி காட்டம் Vanathi srinivasan bjp mla slams cm stalin ponmudi

ஸ்டாலினை பணியவைத்த இந்து எழுச்சி: வானதி காட்டம் Vanathi srinivasan bjp mla slams cm stalin ponmudi

பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டத்திற்கு ஆளான அமைச்சர் க.பொன்முடியும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் வகித்து வந்த துறைகள், அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், எஸ்.முத்துசாமி, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். எந்த அரசாக இருந்தாலும் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், முதல்வர் ஸ்டாலின் இப்போது செய்திருக்கும் இந்த அமைச்சரவை மாற்றம் வழக்கமானது அல்ல. இந்த மாற்றம், ஸ்டாலினின் விருப்பமும் அல்ல. நீதிமன்றங்களும், தமிழ்நாட்டு மக்களும் அளித்த கடும் நெருக்கடியால், வேறு வழியின்றி, செந்தில் பாலாஜியையும் பொன்முடியையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்கிறார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கு பலரிடம் பணம் வாங்கியதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில்தான், அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் ஜாமின் கிடைத்த அடுத்த இரு நாட்களில் அவர் மீண்டும் அமைச்சரானார். இப்போது உச்ச நீதிமன்றம் அவரின் ஜாமினை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி ராஜினாமா செய்திருக்கிறார்

ஏப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி