உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக அரசின் ஆணவத்துக்கு அளவே இல்லை: வானதி சீற்றம் | BJP | Vanathi Srinivasan | BJP Women's Wing

திமுக அரசின் ஆணவத்துக்கு அளவே இல்லை: வானதி சீற்றம் | BJP | Vanathi Srinivasan | BJP Women's Wing

ஜனநாயக வழியில் போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா? என தமிழக அரசுக்கு பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகத்தை தாண்டி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியின் புகாரில் குறிப்பிட்டுள்ள யார் அந்த சார்? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. யாரோ முக்கியப் புள்ளி ஒருவரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய பிறகுதான் கைது செய்வார்கள். ஆனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட திமுக அரசு அனுமதிப்பதில்லை.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை