/ தினமலர் டிவி
/ பொது
/ ஆதீனம் மீது திமுக அரசு ஏவி விட்ட அடக்குமுறை! | BJP MLA Vanathi | Madurai Adheenam
ஆதீனம் மீது திமுக அரசு ஏவி விட்ட அடக்குமுறை! | BJP MLA Vanathi | Madurai Adheenam
மே 2ம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த உலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே, அவரது கார் விபத்தில் சிக்கியது. இது தன்னை கொல்ல நடந்த சதி என்றும், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களின் அடையாளங்களையும் கூறியிருந்தார். ஆதினம் மத மோதலை உருவாக்கும் வகையில் கூறி இருப்பதாக சென்னையை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மதுரை ஆதீனம் மீது சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய கோர்ட், அவர் வசிக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டது.
ஜூலை 23, 2025