4 புதிய வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் | PM MODI | Vande bharat | 4 New Trains | Suresh Gobi
எர்ணாகுளம் டு பெங்களூரு, பிரோஸ்பூர் டு டில்லி, லக்னோ டு ஷஹாரான்பூர், பனாரஸ் டு கஜூராஹோ நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி வாரணாசியில் நடந்தது. எர்ணாகுளம் டு பெங்களூரு வந்தே பாரத் ரயிலை மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி துவக்கி வைத்து அதில் பயணம் செய்தார். இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 7 இடங்களில் நின்று செல்லும். தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்களிடையே இயக்கப்பட்டாலும் தமிழகத்தில் தான் அதிக ஸ்டேஷன்களில் நிற்கிறது . ஜவுளித்துறையினருக்கு வசதியாக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை என 4 நகரங்களில் நிறுத்த வேண்டும் என முன்னதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கேட்டிருந்தார். அதை ஏற்று ரயில்வே செயல்படுத்தி உள்ளது. #PMMOD#Vandebharat#4NewTrains#SureshGobi