நடிகர் பார்த்திபன் புகார்; ரயில்வே வருத்தம்
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் சென்று இருக்கிறார். திருப்பூர் ஸ்டேஷனில், அவருக்கு வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை என்று ரயில்வே நிர்வாகத்திடம் அவர் புகார் அளித்து இருக்கிறார். உணவு பறிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். ரயில் சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக்கொண்டும், இப்படி பறிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்யம் அவசியம் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார். புகாரின் நகலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பார்த்திபன், வந்தே பாரத் ரயிலில் தந்த உணவு பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை.
அக் 14, 2024