ஜம்மு டு காஷ்மீர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் Vandhe Bharat Rail for Jammu - Kashmir| VB Train Be
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் என மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்ட நிலையில், ஜம்மு - காஷ்மீரிலும் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜம்முவின் ஸ்ரீ வைஷ்ணோ தேவி கட்ரா ரயில் நிலையத்தில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை வந்தே பாரத் ரயில் பேக்குவரத்து துவங்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அஞ்சில் காட் கேபிள் பாலம் மற்றும் உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தில் இந்த வந்தே பாரத் ரயில் பயணிக்கும் என்பதால், இதில் செல்லும் பயணிகள் மிக அபூர்வ அனுபவத்தை பெறுவர் என ரயில்வே அதிகாரிகள் கூறினர். காஷ்மீரில் நிலவும் கடும் பனிப் பொழிவு மற்றும் கடும் குளிரை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வந்தே பாரத் ரயிலில், அனைத்து வித பாதுகாப்பு அம்சங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள், திடீர் வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.