ஊர் சுற்றிய மகன் மீது தந்தை காட்டிய ஆத்திரம் | Vaniyambadi | Police
திருப்பத்தூர் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன். வாணியம்பாடி பைபாஸில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது மகன் ஸ்ரீதர், வயது 27. எந்த வேலைக்கும் செல்வதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இரவு வீட்டுக்கு திரும்பும் போதெல்லாம் போதையில் வருவாராம். இதனால் முருகேசனுக்கும், ஸ்ரீதருக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. சனிக்கிழமை இரவும் ஸ்ரீதர் போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் அவரை திட்டியுள்ளார்.
மே 04, 2025