தாறுமாறாக ஓடிய கார் விஏஓ மனைவி, மகள் மரணம் VAO wife and daughter dies VAO another kid injured Sivag
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வருபவர் முருகன். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றார். முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவில் வீட்டுக்கு காரில் புறப்பட்டனர்.. நள்ளிரவு 12.30 மணியளவில் சாலை கிராமம் அருகே உள்ள கோட்டையூர் என்ற பகுதியில் கார் சென்றபோது கார் திடீரென தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் முருகனின் மனைவி ரேணுகா தேவி மற்றும் மூத்த மகள் மதிவதனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.. முருகன் மற்றும் இளைய மகள் பலத்த காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அருகிலுள்ள கிராமத்தினரும் போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடுகாயமடைந்த விஏஓ முருகனையும் இளைய மகளையும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.. மனைவி மற்றும் மூத்த மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் முருகன் மற்றும் அவரது மகளை பார்த்தார். தேவையான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. நள்ளிரவில் காரை ஓட்டிவந்த விஏஓ முருகன் கண நேரம் கண் அசந்ததால் கார் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியுள்ளது என போலீசார் கூறினர்.