உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த வாட்டாள் நாகராஜ்! Vatal Nagaraj | Mekedatu Issue | Karnataka | Kaveri

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த வாட்டாள் நாகராஜ்! Vatal Nagaraj | Mekedatu Issue | Karnataka | Kaveri

கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவையில் தகராறு ஏற்பட்டது. இதனை கண்டித்து கன்னட அமைப்புகள் மார்ச் 22ம் தேதி, மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் தமிழக - கர்நாடக எல்லையான அத்திபள்ளியில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அக்கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கலந்து கொண்டார். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென தமிழக எல்லைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை கர்நாடக போலீசார் தடுத்த நிறுத்தி கைது செய்தனர். மகாராஷ்டிராவுக்கு எதிராக மட்டுமல்ல; தமிழகத்துக்கும் எதிராகவும் பந்த் நடத்தப்படும். மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால் முதற்கட்ட போராட்டமாக கர்நாடகாவில் தமிழ் சினிமாக்களை திரையிட விட மாட்டோம் என கன்னட சலுவளி வாட்டாள் கட்சியினர் கூறினர்.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி