டாக்டர் குடும்பத்தினர் மீது கல் எறிந்த விசிக பெண் நிர்வாகி vck district secretary palaniyammal kalla
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை சேர்ந்தவர் பழனியம்மாள். விசிக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். பழனியம்மாள் தன் வீட்டுக்கு எதிரில் உள்ளகாலி நிலத்தில் பலவிதமான மரக்கன்றுகளை நட்டார். அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சரவணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சரவணன் ஒரு டாக்டர். இது, என் இடம்; அங்கு பழனியம்மாள் எப்படி மரக்கன்று நடலாம் என கோபமடைந்த சரவணன், பழனியம்மாள் நட்ட மரக்கன்றுகளை வெட்டி தள்ளினார். இதனால் பழனியம்மாள், அவரது கணவர் வேல்முருகன் ஆவேசமடைந்தனர். ஆதரவாளர்களுடன் சென்று சரவணன் வீட்டின் முன்பக்க கேட் மற்றும் ஜன்னலை கல் மற்றும் கட்டையால் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.