/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் முன் விரோதத்தால் விசிக நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்? Chennai | VCK | Rowdy | Police
சென்னையில் முன் விரோதத்தால் விசிக நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்? Chennai | VCK | Rowdy | Police
சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் விசிகவின் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளராக இருந்தார். அம்பேத்கர் சிலை பகுதியில் உள்ள திமுக மண்டல அலுவலகம் முன்பு தனது நண்பர்களுடன் அன்பழகன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று பைக்கில் வந்த 6 பேர் கண் இமைக்கும் நேரத்தில், அன்பழகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். சங்கர் நகர் போலீசார், அன்பழகனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆக 28, 2026