உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடித்து நொறுக்கப்பட்ட கடைகள்; காயமடைந்த 6 பேர் அட்மிட் veedur dam| rowdyism| Robbery|Viluppuram

அடித்து நொறுக்கப்பட்ட கடைகள்; காயமடைந்த 6 பேர் அட்மிட் veedur dam| rowdyism| Robbery|Viluppuram

விழுப்புரம் அடுத்த வீடூர் அணை வழியாக சென்று வந்த மக்களை, ரவுடிகள் 5 பேர், வழிமறித்து ரகளை செய்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்துள்ளனர். உயிருக்கு பயந்த மக்கள், கேட்டதை கொடுத்தபோதும், அந்த கும்பல், கத்தியால் வெட்டியும், மது பாட்டிலால் அடித்தும் உள்ளனர். அங்கிருந்த கடைக்காரர்கள் தட்டிகேட்டபோது, அவர்களையும் தாக்கி உள்ளனர். கடையில் இருந்து பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர். கஞ்சா போதையில் ரவுடிகள் அட்டாசிட்டி செய்ததாக பார்த்தவர்கள் கூறுகின்றனர். உள்ளூரை சேர்ந்தவர்கள் சிலர், ரவுடிகளை தட்டிகேட்டபோது, அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். பின் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பிடிக்க முயன்றபோது, ரவுடிகள் தப்பியோடினர். அதில், ஒருவன் மட்டும் பிடிபட்டான். போதை கும்பல் தாக்கியதில் மண்டை உடைந்தும், வெட்டு பட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். பிடிபட்ட ஒருவன் உட்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக் 14, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krishnamurthy Venkatesan
அக் 14, 2025 20:51

நாளை காலை பாத்ரூமில் கால் வழுக்கி எலும்பு முறிவு ஏற்பட்டதாக நாளை காலை செய்தி வந்தால் மட்டுமே விழுப்புரம் மக்கள் நிம்மதி அடைவார்கள். இவர்களை ஜாமினில் விடக்கூடாது என்று கடவுளை பிரார்த்திப்போம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி