உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடைக்கலம் தேடிய கார் ஓனர்கள் வேதனை Velachery Bridge Car Parking| Pallikkaranai Bridge| Chennai fl

அடைக்கலம் தேடிய கார் ஓனர்கள் வேதனை Velachery Bridge Car Parking| Pallikkaranai Bridge| Chennai fl

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் 2 நாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பத்திரமாக இருக்கும்படியும், தங்கள் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளும்படியும் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆண்டு தோறும் பருவமழை காலத்தில் அதீத மழை பெய்யும் போது, சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் வெள்ளம் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடும். கார், பைக்குகள் மழைநீரில் மூழ்குவதும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதுமான சம்பவங்கள் நடந்தன. கடந்த ஆண்டும் இதே போன்ற சூழல் ஏற்பட்ட போது, மக்கள் தங்கள் கார்களை வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் நிறுத்தி அவற்றை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொண்டனர். பாலத்தில் இடம் கிடைக்காதவர்களின் கார்கள் வெள்ளத்தில் மூழ்கி வீணாகின. அவற்றை சரி செய்ய பலர் லட்சங்களை செலவழிக்க நேர்ந்தது. இந்நிலையில் தற்போது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிவாசிகள், தங்கள் வாகனங்களை முன்கூட்டியே மேம்பாலங்களில் நிறுத்தினர். வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் மற்றும் பள்ளிக்கரணை மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாலத்தில் கார்களை நிறுத்தினால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தியும் மக்கள் தொடர்ந்து கார்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கார்களுக்கு, மழை முடியும் வரை தினமும் அபராதம் விதித்தாலும் அதை கட்ட தயார். ஆனால், கார்களை வீட்டின் அருகே தெருக்களில் நிறுத்தி மழைநீருக்கு பலி கொடுக்க முடியாது என கார் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை தெற்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் ஆய்வு செய்தார்.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை