பக்தர்களின் மனுவை விசாரித்த ஐகோர்ட் உத்தரவு! Velliyangiri Hills | Covai | High Court | Chennai
கோவை மாவட்டம், முட்டத்துவயல் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வெள்ளியங்கிரி மலையின் 7வது மலையில், வெள்ளியங்கிரி ஆண்டவரின் சுயம்புலிங்க கோயில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை 13ம் தேதி முதல் மார்கழி 30 வரை, மகாதீபம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி வனத்துறை அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பூஜை, தீபம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு, அக்டோபர் 29ல் விண்ணப்பம் செய்தேன். ஆனால், அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, நான் அளித்த மனுவை பரிசீலித்து, செம்மேடு ஊர் மக்கள் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் சீனிவாசன் வாதாடினார். கடந்த நவம்பர் 28 முதல், அடுத்தாண்டு ஜனவரி 14 வரை, வெள்ளியங்கிரி ஆண்டவரின் சுயம்புலிங்கத்துக்கு பூஜை செய்ய, செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. காலை 10 மணி முதல் 3 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.