/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக ஆட்சியில் கிட்னி திருட்டு அதிகரித்துள்ளது: வேலூர் இப்ராஹிம் Vellore Ibrahim | BJP
திமுக ஆட்சியில் கிட்னி திருட்டு அதிகரித்துள்ளது: வேலூர் இப்ராஹிம் Vellore Ibrahim | BJP
பாஜ சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர் இன்று காலை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்தார். கிட்னி திருட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். தாங்கள் மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு நடத்தினால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என போலீசார் கூறினர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ப்ரீத் திமுக ஆட்சியில் கிட்னி திருட்டு அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூட விடாமல் அராஜக ஆட்சி நடப்பதாகவும் அவர் கூறினார்.
செப் 08, 2025