வேலூர் அரசு ஆஸ்பிடலால் அவதிப்படும் அடுக்கம்பாறை மக்கள் Gh Drainage Water | Mixed in River | Vellore
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. ஆஸ்பிடல், மெடிக்கல் காலேஜ், நர்சிங் காலேஜ் மற்றும் ஹாஸ்டல் கழிவுநீர் அனைத்தும் அருகிலுள்ள ஏரியில் விடப்படுகிறது. நீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஏரியில் விடுவதால் தண்ணீர் மாசடைகிறது. ஏரியின் அருகில் உள்ள கிணறுகளில் உள்ள குடிநீரும் மாசடைகிறது. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. அதை சார்ந்துள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. மருத்துவமனையை கட்டிய நாளில் இருந்து 20 வருடமாக கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாகவும், அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.