உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கண் கட்டி கஸ்டடியில் இருக்கும் வெனிசுலா அதிபர் | Trump | Venezuela | Maduro captured | US attacks |

கண் கட்டி கஸ்டடியில் இருக்கும் வெனிசுலா அதிபர் | Trump | Venezuela | Maduro captured | US attacks |

அமெரிக்கா - வெனிசுலா இடையேயான மோதல் சனிக்கிழமை உச்ச கட்டத்தை எட்டியது. வான்வழி தாக்குதலுக்கு பின் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் நாடு புகுந்து கைது செய்தது. அவரையும் அவரது மனைவியையும் நாடு கடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். பின் மதுரோவை கண்ணை கட்டி அழைத்து வரும் போட்டோவையும் வெளியிட்டார். போர்க் கப்பலில் மதுரோ கண் கட்டி கஸ்டடியில் இருக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து பத்ரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது; சட்ட விரோதியான மதுரோவை நீதியின் முன் நிறுத்தி உள்ளோம். எங்கள் பலம் வாய்ந்த ராணுவம் முன் வெனிசுலா ராணுவம் மண்டியிட்டது. அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி, ஒரு அமெரிக்க வீரர் கூட கொல்லப்படவில்லை. இன்னும் வலுவான தாக்குதலுக்கு தயாராக இருந்தோம். ஆனால் இனி வெனிசுலாவை தாக்கும் அவசியம் இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பே இதை செய்ய திட்டமிட்டு இருந்தோம், ஆனால் அப்போது வானிலை சரியாக இல்லை. போதை பொருள் கடத்தல், தீவிரவாதம், வன்முறையை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது. வெனிசுலாவை அமெரிக்கா தான் நிர்வாகம் செய்யும். புதிய அரசு வெனிசுலாவை ஆளும் வரை நாங்களே அந்நாட்டை நிர்வகிப்போம். சர்வதேச சட்டம் மதிக்கப்படவில்லை. வெனிசுலாவின் எண்ணெய் உட்கட்டமைப்பை மறுசீமைப்பு செய்வோம் வெனிசுலாவின் பொருளாதாரத்தையும், மக்களின் வருமானத்தையும் உயர்த்துவோம். சர்வாதிகாரியும் பயங்கரவாதியுமான மதுரோ வெனிசுலாவிலிருந்து அகற்றப்பட்டுவிட்டார். மக்கள் மீண்டும் சுதந்திரம் பெற்றுள்ளனர் என கூறி உள்ளார். #Trump | #Venezuela | #Madurocaptured | #USattacks | #Venezuela-USConflict

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ