உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேட்டங்குடி சரணாலயத்துக்கு முன்கூட்டியே வந்த பறவைகள் உணர்த்துவது என்ன? Vettangudi bird sanctuary |

வேட்டங்குடி சரணாலயத்துக்கு முன்கூட்டியே வந்த பறவைகள் உணர்த்துவது என்ன? Vettangudi bird sanctuary |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிய கொள்ளுக்குடிப்பட்டி, சின்ன கொள்ளுக்குடிப்பட்டி, வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்களை உள்ளடக்கி 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபர் மாதங்களில் ஆசிய, ஐரோப்பிய பறவைகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வருகின்றன. அவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து, மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் திரும்பி சென்று விடும். பறவைகளுக்காக இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை. தென்மேற்கு பருவமழை கடந்த மாதங்களில் பெய்ததால் சரணாலயம் முழுவதும் பசுமை போா்த்தியதுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்தே பறவைகள் வரத் தொடங்கின. சாம்பல் கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, நாமக்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, சிறிய நீர்க்காகம், முக்குளிப்பான் உள்ளிட்ட வகை பறவைகள் தற்போது வந்துள்ளன. இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. அவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க தொடங்கியுள்ளன.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை