கூட்டத்தை திசை திருப்ப உதயநிதி விசிட், ஜல்லிக்கட்டு | Vijay | TVK | Vijai Kovai Visit
நடிகர் விஜய் 2026 சட்டசபை தேர்தலுக்கு தனது கட்சியை தயார்படுத்தி வருகிறார். 120 மாவட்டச்செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுதும் உள்ள 60,000 ஓட்டுச்சாவடிகளுக்கு, பூத் ஏஜன்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நான்கு மண்டலமாக பிரித்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. முதல் பயிற்சி கருத்தரங்கம் கோவையில் இரண்டு நாட்களாக நடந்தது. கோவை சென்ற விஜயை பார்ப்பதற்கு மக்கள் அதிக அளவில் கூடினர். கோவையை தொடர்ந்து மதுரை, திருச்சி, சென்னையில் பூத் ஏஜன்டுகள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. கோவை கருத்தரங்கம் வாயிலாக, அங்கு விஜய் செல்வாக்கு அதிகரித்துள்ளதா என உளவுத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். விஜய்க்கு போட்டியாக துணை முதல்வர் உதயநிதி அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். விஜயை பார்க்க தொண்டர்கள், மக்கள் செல்வதை தவிர்க்க கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்தப்பட்டது. இதையும் மீறி விஜயை பார்க்க திரண்டவர்களால், அது ஓட்டாக மாற வாய்ப்புள்ளதா என்பது குறித்து விரிவாக அறிக்கை அளிக்கும்படி உளவுத்துறைக்கு ஆளுங்கட்சி சார்பில் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.