உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக அவதூறு மன்னர்களுக்கு மக்கள் சக்தியை தவெக காட்டும் Vijay | TVK | DMK | MKStalin

திமுக அவதூறு மன்னர்களுக்கு மக்கள் சக்தியை தவெக காட்டும் Vijay | TVK | DMK | MKStalin

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களால் தூக்கி எறியப்படப் போகும் கட்சி தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட அந்த கட்சி, தவெகவை தூற்றுவதை இலக்காகவும் முழுநேர வேலையாகவும் கொண்டுள்ளது. தமிழகத்தில் 1969க்குப் பிறகு அவர்களுக்கு அவதூறு தான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல் தான் லட்சியக் கோட்பாடு. தற்போது மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வந்துள்ள தவெகவை கண்டதால் அவர்களின் மூளை மழுங்கிவிட்டது. விமர்சிப்பதாக நினைத்து தவெக மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர். அவர்கள் மீது தவெக இன்னும் முழுமையான விமர்ச்சிக்க தொடங்கவே இல்லை. மிக லேசான விமர்சனங்களை நாகரிகமாக வைத்தோம். அதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பை கண்டு அவர்கள் அஞ்சி நடுங்கினர். தவெக மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் அவர்களால் வைக்க முடியவில்லை. அந்த இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர், எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது என்கிறார். தங்களைக் கொள்கைவாதிகளாக காட்டிக்கொள்ளவும், மக்களை ஏமாற்றவும், தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம், மண், மொழி, மானம் என சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார்.

நவ 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Premanathan S
நவ 12, 2025 17:26

டில்லி குண்டு வெடிப்பு, கோவை பெண் பிரச்னை, மற்றும் பல இடங்களில் கொலை, கொள்ளை இவைகளை பற்றி பொறுப்புள்ள மக்கள் கவலைப்படும் நேரத்தில் கட்சியைப்பற்றி பேசும் தலைவர்கள் நாடு விளங்கிவிடும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ