/ தினமலர் டிவி
/ பொது
/ பல மணி நேரம் காத்திருந்தும் விஜய் பார்க்காததால் உச்சகட்ட அதிருப்தி | Vijay | TVK | Vijay Fans
பல மணி நேரம் காத்திருந்தும் விஜய் பார்க்காததால் உச்சகட்ட அதிருப்தி | Vijay | TVK | Vijay Fans
தவெக தலைவர் விஜய்யின் 51வது பிறந்த நாளான இன்று அவரது நீலாங்கரை வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு இருந்தனர். காலையில் இருந்து பல மணி நேரம் காத்து இருந்தும் மாலை வரை விஜய் அவர்களை சந்திக்கவில்லை. மதியம் விஜய் வீட்டில் இருந்து ஒரு கார் கிளம்பியது. அதில் அவர் இருப்பார் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அதன் பின் ஓடினர். கண்ணாடி மூடியபடி அந்த கார் வேகமாக சென்றது. விஜய் அதன் உள்ளே இருந்தாரா என்பதும் சரியாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சிலர் அங்கிருந்து வேதனையுடன் கிளம்ப ஆரம்பித்தனர்.
ஜூன் 22, 2025