உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்க ஏரியா உள்ளே வராதே தாக்கி கொண்ட தவெகவினர் | Vijay Birthday Celebration | Tvk members fight | kr

எங்க ஏரியா உள்ளே வராதே தாக்கி கொண்ட தவெகவினர் | Vijay Birthday Celebration | Tvk members fight | kr

கிருஷ்ணகிரி, கீழ்புதூரில் உள்ள வீட்டு வசதி வாரிய பகுதியில் தவெக நகர செயலாளர் சசிக்குமார் தலைமையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அங்கு வந்த கீழ்ப்புதூர் தவெக கிளை செயலாளர் நாகராஜ், இது என்னோட ஏரியா, நான் இல்லாமல் எப்படி விழா நடத்தலாம் எனக்கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். நகர செயலாளர் சசிகுமாருடன் வந்தவர்கள் எதிர்குரல் எழுப்ப, இரு தரப்பினர் இடையே மோதல் உண்டானது. நகர செயலாளர் சசிகுமாரின் ஆதரவாளர் தப்ரீஸ் என்பவர் கத்தியால் தாக்கியதில், பார்த்திபன், முருகேசன், சூர்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி