உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிபிஐக்கு மாறியது கரூர் வழக்கு; அடுத்த நகர்வுக்கு தயாராகும் தவெக Tvk|Actor vijay| vijay meets tvk ex

சிபிஐக்கு மாறியது கரூர் வழக்கு; அடுத்த நகர்வுக்கு தயாராகும் தவெக Tvk|Actor vijay| vijay meets tvk ex

கரூரில் கடந்த 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால், தவெக முக்கிய நிர்வாகிகள் மீது கரூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன்ராஜ் உள்ளட்டோர் கைது செய்யப்பட்டனர். தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் கைதுக்கு பயந்து தலைமறைவாகினர். அதன் பின் விஜய்யும் வெளியே வரவில்லை. கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. வழக்கு சிபிஐ கைக்கு மாறியதால் தவெக நிர்வாகிகள் நிம்மதி அடைந்தனர். 2 வாரங்களுக்கு பின், ஆனந்த் வெளியே வந்தார். 2 தினங்களுக்கு முன் விஜய்யை சந்தித்தார். அதன் பின் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளை தவெக அலுவலகத்தில் சந்தித்து அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நகர்வு குறித்து ஆலோசித்தார். இதனிடையே, நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமின் கிடைத்தது. இச்சூழலில் கரூர் சம்பவம் நடந்து 19 நாட்களுக்கு பின், தவெக தலைவர் விஜய் இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்தித்துள்ளார். அப்போது, ஜாமினில் வந்த நிர்வாகிகள், தங்கள் குடும்பத்தோடு வந்து விஜய்யை சந்தித்து பேசியுள்ளனர். #ActorVijay #TVK #VijayMeetsExecutives #VijayTvkOfice #KarurCase #KarurStampede #KarurIncident

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ