கரூர் செல்ல இழுத்தடிக்கும் விஜய்... தவெகவினர் ஷாக் karur stampede | vijay to go karur | karur update
கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. மொத்தம் 110 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் நடந்ததும், அங்கிருந்து அவசர அவசரமாக திருச்சிக்கு காரில் சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்திற்கான காரணத்தை விஜய் தெளிவுப்படுத்துவார் என்று திருச்சி விமான நிலையத்திலும், சென்னை வீட்டிலும் காத்திருந்த தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவுமே சொல்லாமல் சென்று விட்டார். உயிரிழந்த தொண்டர்கள் குடும்பத்தினரையும், மக்களையும், காயம் அடைந்தோரையும் சந்தித்து விஜய் ஆறுதல் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வரை அவர் செல்லவில்லை. அதே நேரம், தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மூலம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு, மதுரை ஐகோர்ட் கிளையில் முறையிடப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் பல அரசியல் கட்சி தலைவர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விட்டனர். ஆனால் கரூர் செல்ல அனுமதி கேட்டு கோர்ட்டை நாட, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா முடிவு செய்துள்ளனர். இது தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. இதுகுறித்து தவெக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கரூர் சென்று ஆறுதல் கூறாமல் விஜய் காலம் தாழ்த்துவதால், தவறு அவர் மீது இருப்பதாக பல கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். கட்சியினருக்கும் இது பெரும் குறையாக உள்ளது. சொந்தக் கட்சி தொண்டர்களையும், குடும்பத்தினரையும் பார்ப்பதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை. அனுமதி கேட்டு கோர்ட் செல்ல வேண்டியதில்லை. விஜய் மற்றும் அவர் கூட இருப்பவர்களின் நடவடிக்கைகள் எதுவுமே புரியவில்லை என்று கட்சி வட்டாரம் கூறியது. #KarurStampede #TVKVijay #AadhavArjuna #DMKvsTVK #DMKSaravanan #viralvideo #groundreport #TVKVijayKarurStampede #StampedeAlert #KarurNews #BreakingNews #VijayUpdates #TamilNaduNews #SafetyFirst #EventSafety #TragicEvent #CrowdControl #Awareness #CommunitySupport #LocalNews #KarurUpdates #VijayCommunity