பெரம்பலூர் போகாத விஜய்: நள்ளிரவில் நடந்த சம்பவம் | Vijay TVK campaign | Perambalur vijay
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்கான பிரசார சுற்றுப்பயணத்தை சனியன்று திருச்சியில் இருந்து துவங்கினார்.
விஜயை பார்க்க திருச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. காலை 10:30 மணிக்கு அங்கு விஜய் பேசி இருக்க வேண்டும்.
சரியான நேரத்தில் ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்ட விஜயால், பிரசார வேனில் ஏறிய பிறகு உரிய நேரத்தில் வர முடியவில்லை.
வழிநெடுக தொண்டர்கள் திரண்டதால் பிரசார வேன் ஊர்ந்து சென்றது.
இதனால் 10:30க்கு போக வேண்டிய இடத்துக்கு பகல் 3 மணிக்கு தான் விஜய் வந்தார்.
திருச்சிக்கு அடுத்து அரியலூர், பெரம்பலூரில் அவர் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலையில் வர வேண்டிய திருச்சிக்கே மாலையில் தான் வர முடிந்தது என்பதால், மற்ற ஊர்களில் தவெக தொண்டர்கள் காத்திருந்து காத்திருந்து சோர்வடைத்தனர்.
விஜய் பயண திட்டப்படி, அரியலூரில் பகல் 1 மணி முதல் 3 மணி வரை விஜய்க்கு போலீசார் நேரம் ஒதுக்கி இருந்தனர்.
அடுத்து குன்னம், பெரம்பலூரில் 7 மணிக்குள் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் 3 மணிக்கு வர வேண்டிய அரியலூருக்கே இரவு 8 மணிக்கு மேல் தான் வந்து சேர்ந்தார்.
அங்கு 20 நிமிடம் பேசிவிட்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நோக்கி கிளம்பினார்.
இரவு 10 மணிக்கு மேல் அங்கு சென்று சேர்ந்தார். தனக்காக மணிக்கணக்கில் காத்திருந்த ரசிகர்களை நோக்கி கை அசைத்துவிட்டு சென்றார்.
அடுத்து இரவு 12 மணியை தாண்டியும் விஜய் பிரசார வாகனம் பெரம்பலூர் செல்லவில்லை.