உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய்க்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு | Vijay | TVK | Y Security | Home mini

விஜய்க்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு | Vijay | TVK | Y Security | Home mini

நாட்டில் முக்கிய விஐபிக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பாதுகாப்பு அளவுகோல்களை வைத்துள்ளது. தேவைக்கு ஏற்ப வழங்கும் வகையில் X, Y, Z, Z+ போன்ற பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. அதாவது மிரட்டல் நிலை, புலனாய்வு தகவல்கள், அரசியல் முக்கியத்துவம் அடிப்படையில் இந்த பாதுகாப்பு நிலைகள் வழங்கப்படும். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறப்படுகிறது. இதன்படி அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இந்த பாதுகாப்பு தமிழகத்துக்குள் மட்டும் வழங்கப்படும்.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ