தேர்தல் நெருங்குவதால் ஆலோசனை கூட்ட நாடகம்
நீட் விலக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இச்சூழலில், நீட் விவகாரத்தை வைத்து திமுக மீண்டும் மீண்டும் அரசியல் மோசடி செய்வதாக தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். அவரது அறிக்கை; ஆட்சிக்கு வருவதற்காக பொய்களின் பட்டியலை தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிட்டது. அதில் ஒன்று நீட் விலக்கு. அதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாக சொல்லி மோசடி பிரசாரம் செய்தனர். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதாக சொல்லி தப்பித்தனர். தேர்தல் நெருங்குவதால் இப்போது மீண்டும் நீட் போராட்டத்தை நீட்டி முழக்குகின்றனர். இயலாமையை மறைக்க, அனைத்து கட்சி கூட்டம், சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம், தனித்தீர்மானம் என மக்களை திசைத்திருப்பி ஏமாற்றுவது திமுகவின் வழக்கம்.