உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவசர அவசரமாக சிலை திறப்பதன் பின்னணி | TVK | TVK Campaign | Vijay | Vijay Campaign | DMK | CM Stalin

அவசர அவசரமாக சிலை திறப்பதன் பின்னணி | TVK | TVK Campaign | Vijay | Vijay Campaign | DMK | CM Stalin

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் துவங்கியதும், அக்கட்சி குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் யாரும் பெரிதாக எதுவும் பேச வேண்டாம். அக்கட்சி எப்படி செயல்படுகிறது? அக்கட்சிக்கான மக்கள் ரியாக்ஷன் எல்லாம் பார்த்து விட்டு அதன் பின் அக்கட்சி குறித்து பேசலாம் என திமுக தலைமையிடம் இருந்து கட்சியின் நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அக்கட்சி குறித்து பேசுவதை திமுக தலைவர்களும், நிர்வாகிகளும் தொடர்ந்து தவிர்த்து வந்தனர். விக்கிரவாண்டியிலும், அதற்கு பின் மதுரையிலும் தவெக நடத்திய மாநில மாநாடுகளுக்கு பெரிய அளவில் கட்சியினர் திரண்டனர். தமிழகத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டியென நடிகர் விஜய் அறிவித்தார்.

செப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை