எல்லையில் நடப்பது என்ன? இரவில் விக்ரம் மிஸ்ரி விளக்கம் |Vikram Misri|Pakistan| Foreign Secretary
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் சூழல் சனி மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தியா, பாகிஸ்தானும் இதை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டது. போர் பதற்றம் விலகி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எல்லை பகுதிகளில் மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட 3 மணி நேரங்களில் பாகிஸ்தான் மீண்டும் அத்து மீறியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் என எல்லை பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்ந்துள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானின் எல்லை பகுதியில் மின் சப்ளை முழுதுமாக நிறுத்தப்பட்டது. ஒரு சில பகுதிகளில் வெளியான வீடியோக்களில் பாகிஸ்தான் டிரோன்கள் அடையாளம் காணப்பட்டன. சண்டை நிறுத்த அறிவிப்பு என்ன ஆனது. ஸ்ரீநகரை சுற்றி வெடி சத்தம் கேட்கிறது என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் அறிக்கை வெளியிட்டார். குஜராத்தின் கட்ச் பகுதியில் பல டுரோன்கள் வந்ததாக அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.