உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தரமற்ற சாலைப்பணியை பார்த்து கொந்தளித்த எம்எல்ஏ Tharahai Cuthbert Vilavancode MLA congress minister

தரமற்ற சாலைப்பணியை பார்த்து கொந்தளித்த எம்எல்ஏ Tharahai Cuthbert Vilavancode MLA congress minister

தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு வருகையை முன்னிட்டு, மார்த்தாண்டத்தில் சேதம் அடைந்திருந்த சாலைகளை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிலை செல்லும் சாலையில் பேட்ச் ஒர்க் நடப்பதை கேள்விப்பட்ட விளவங்கோடு காங்கிரஸ்- எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் சம்பவ இடத்துக்கு விரைந்தார். சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. 2 நாளைக்கு முன்புகூட 2 பேர் இறந்தார்கள். பேட்ச் ஒர்க் செய்வதால் எந்த பிரயோஜமும் இல்லை; சாலையின் நிலையை அமைச்சரே பார்க்கட்டும்; அதுவரை பணியை செய்ய வேண்டாம் என கூறி, பணிகளை தடுத்து நிறுத்தினார்.

செப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி