/ தினமலர் டிவி
/ பொது
/ குறைந்த உயரத்தில் சப்வே அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தால் பரபரப்பு | Villupuram - Nagai Highways
குறைந்த உயரத்தில் சப்வே அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தால் பரபரப்பு | Villupuram - Nagai Highways
விழுப்புரம் - நாகை இடையே 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 180 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம்- சூரக்காடு, சூரக்காடு- தரங்கம்பாடி இடையே 2 பகுதிகளாக ஊழியர்கள் நான்கு வழிச்சாலை அமைத்து வருகின்றனர். கொள்ளிடம் முதல் சூரக்காடு வரை பணிகள் முடிந்த நிலையில் சூரக்காடு முதல் தரங்கம்பாடி வரையிலான சாலை அமைக்கும் பணி மந்த கதியில் நடக்கிறது. இந்த பணிகளை டில்லி வில்ஸ்பன் நிறுவனம், எஸ்பிஎல் நிறுவனம் இணைந்து செய்கின்றன.
நவ 08, 2024