வினேஷ் விவகாரத்தில் ஒலிம்பிக் விதி என்ன சொல்கிறது? | Vinesh Phogat | Paris Olympics | wrestling
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் 50 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் விளையாடினார். வழக்கமாக 53 கிலோ பிரிவில் களமிறங்கும் வினேஷ் போகத் முதன்முறையாக 50 கிலோ பிரிவில் பங்கேற்றார். கியூபாவின் லோபசை 5க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி இருந்தார். இதனால் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைக்கும் என்பது உறுதியானது. பைனலுக்கு முன்னதாக வினேஷ் போகத் உடல் எடை சோதித்து பார்க்கப்பட்டது. 50 கிலோ 100 கிராம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 50 கிலோ பிரிவில் விளையாடும் வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடியதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.