உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விதிகளை மீறி உள்குத்தகை; விசாரணையில் வெளிச்சம்! | Fireworks | Fireworks factory | Virudhunagar

விதிகளை மீறி உள்குத்தகை; விசாரணையில் வெளிச்சம்! | Fireworks | Fireworks factory | Virudhunagar

நேற்று முன்தினம் விருதுநகர் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஆறு பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். விபத்து தொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிந்தனர். ஆலையை உள்ளகுத்தைகைக்கு எடுத்து நடத்திய சசிபாலன் கைதானார். 3 பேர் கைதான நிலையில் தலைமைறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விபத்துக்கு முக்கிய காரணம் பட்டாசு ஆலை குத்தகைக்கு விடப்பட்டது தான் என தெரிய வந்துள்ளது. சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் நாக்பூர், டி.ஆர்.ஓ. மற்றும் சென்னை உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. இங்கு எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுவது இயல்பு. அதில் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் பாதுகாப்பின்றி, விதி மீறல்களுடன் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் வெடி விபத்தில் உயிர் பலி ஏற்படுகிறது.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை