யூடியூப் பார்த்து ஸ்கெட்ச் போட்டு மாமியாரை தீர்த்து கட்டிய மருமகள்|Visakhapatnam|Andhra|Crime
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டுர்த்தி அருகே உள்ள அப்பன்னபாலத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். கோயில் பூசாரி. இவரது மனைவி லலிதா தேவி வயது 30, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சுப்பிரமணியத்தின் தாய் ஜெயந்தி கனக மகாலட்சுமியும் அவர்களுடன் வசித்து வந்தார். கடந்த 7ம் தேதி இரவு சுப்பிரமணியம் கோயிலுக்கு சென்றார். அப்போது, பக்கத்துவீட்டில் வசிப்பவர், சுப்பிரமணியத்துக்கு போன் செய்து, உங்க வீட்டுல தீ பற்றி எரியுது உங்க அம்மா இறந்து போயிட்டாங்க. உன் மகளுக்கு லேசான காயம் என பதற்றத்துடன் சொன்னார். அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் ஓடோடி சென்று பார்த்தார். பெற்ற தாய் கருகி கிடந்ததை பார்த்து கதறி அழுதார். போலீசார் வந்து லலிதா தேவியிடம் விசாரித்தனர். அவர் மின்கசிவால் டிவி வெடித்து தீ பற்றியதாக கூறினார். ஆனால் மின்கசிவுக்கான எந்தவித தடயமும் இல்லை. வீட்டினுள் பெட்ரோல் வாசனை வீசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முன்னுக்கு பின் முரணாக பேசிய லலிதா தேவியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில், யூடியூப்பில் கொலையை விபத்தாக மாற்றுவது எப்படி? என்ற தலைப்பில் அவர் பல வீடியோக்களை பார்த்திருப்பது தெரியவந்தது.