அதிபர் டிரம்ப் அதிகார பூர்வ அறிவிப்பு | Trump | Vivek Ramaswamy | Ohio Governor | US President | US
அமெரிக்காவின் ஓஹியோ மாநில கவர்னராக குடியரசுக் கட்சியை சேர்ந்த மைக் டிவைன் பதவி வகிக்கிறார். 2 முறை அவர் கவர்னர் ஆனதால் மூன்றாவது முறையாக போட்டியிட தகுதியற்றவர். ஓஹியோ மாநில கவர்னர் தேர்தல் 2026 நவம்பர் 3ல் நடக்க உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனவரி 11, 2027ல் பதவியேற்பார். அமெரிக்க வழக்கப்படி தேர்தலுக்கு ஒராண்டுக்கு முன்பே வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். அந்தவகையில் குடியரசு கட்சியை சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். விவேக்கை நன்றாக தெரியும். அவர் திறமை வாய்ந்தவர் மற்றும் மிகவும் புத்திசாலி. ஒரு நல்ல மனிதர், நம் நாட்டை உண்மையிலேயே நேசிக்கிறார். பொருளாதாரத்தை வளர்க்கவும், வரிகள் மற்றும் விதிமுறைகளைக் குறைக்கவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் உங்கள் அடுத்த கவர்னராக விவேக் ராமசாமி அயராது போராடுவார். எனது முழுமையான ஒப்புதலை பெறுவார். அவர் உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் என டிரம்ப் கூறியுள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்ட தமிழர் விவேக் ராமசாமி, வயது 40. பெற்றோர் கேரளா, பாலக்காட்டில் இருந்து அமெரிக்காவின் சின்சினாட்டியில் குடியேறினர். ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலையில் பட்டம் பெற்றவர். இவரது மனைவி தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் அபூர்வா திவாரி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி பின் அதில் இருந்து பின் வாங்கினார். #Trump#VivekRamaswamy#OhioGovernor#USPresident#USGovernor