விகே பாண்டியனை சிக்க வைத்த ஹெலிகாப்டர் | VK Pandian | BJP vs BJD | 450 Helipads | Naveen Patnaik
ஒடிசாவில் நவின் பட்நாயக் நடத்தி வந்த அரசியல் சாம்ராஜ்யத்தை இந்த முறை பாஜ தகர்த்தது. முதல் முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. அன்று முதல் ஒடிசா அரசியல் களம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது. நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பார்க்கப்பட்ட தமிழர் விகே பாண்டியனை இப்போது அம்மாநில பாஜ அரசு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பாண்டியன், நவீன் பட்நாயக் ஆட்சியின் போது முதல்வரின் தனிச்செயலாளராகவும், 5டி என்ற துறை செயலாளராகவும் பதவி வகித்தார். அப்போது அவர் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஆர்டிஐ தன்னார்வ அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியது. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 8 மாதங்களில் அவர் 450 முறை ஹெலிகாப்டரில் ஒடிசாவை விசிட் அடித்துள்ளார். ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்தில் எல்லாம் ஹெலிபேட் அமைத்துள்ளனர். கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட இடங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.