உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் கோரம்! நெஞ்சை பிழியும் இளைஞன் வீடியோ karur stampede | tvk vijay meeting stampede viral video

கரூர் கோரம்! நெஞ்சை பிழியும் இளைஞன் வீடியோ karur stampede | tvk vijay meeting stampede viral video

இப்படி நண்பர்களுடன் கலகலவென மகிழ்ச்சி பொங்க தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர் இப்போது உயிருடன் இல்லை. நாட்டை உலுக்கிய கரூர் கோர சம்பவம் இவரையும் பலி கொண்டது. இப்போது இளைஞரின் பின்னணி தகவல் வெளியாகி நெஞ்சை நொறுக்கிப்போட்டுள்ளது. விஜயின் தீவிர ரசிகரான இந்த இளைஞர் பெயர் ரவி கிருஷ்ணன் வயது 29. இன்ஜினீயரிங் பட்டதாரி. கரூர் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர். சொந்தமாக கட்டுமான வேலைகளை எடுத்து பார்த்து வந்தார். அப்பா இல்லை. அம்மாவும், தங்கையும் தான். அம்மா பெயர் ஞானம்மாள். தங்கை பிரியா. இவர்கள் 2 பேரையும் ரவி கிருஷ்ணன் தனது சம்பாத்தியத்தில் கவனித்து வந்தார். கல்யாண வயது வந்ததால், ரவி கிருஷ்ணனுக்கு சமீபத்தில் தான் வரண் பார்த்தனர். மணப்பெண் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டனர். ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் நடத்த நாள் குறித்தனர். எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது. இதற்கிடையே சனிக்கிழமை கரூர் பிரசாரத்துக்கு விஜய் வந்தார். எப்படியாவது தனது தலைவரை பார்த்தே ஆக வேண்டும் என்று ரவி கிருஷ்ணனுக்கு ஆசை. விடிந்தால் நிச்சயதார்த்தம், ஆனாலும் விஜயை பார்க்க பேராவலுடன் சென்றார். எதிர்பாராதவிதமாக நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி ரவி கிருஷ்ணனும் மரணம் அடைந்தார். ஏற்கனவே அப்பா இல்லாமல் நிர்கதியாய் நின்ற அம்மா, தங்கையை இவர் தான் கவனித்து வந்தார். இப்போது ரவி கிருஷ்ணனும் இல்லை. அம்மாவும் தங்கையும் இனி என்ன செய்வார்கள்? விடிந்தால் நிச்சயதார்த்தம்... சீக்கிரமே திருமணம்... இப்படி நெஞ்சம் நிறைய பல கனவுகளை சுமந்த ரவி கிருஷ்ணன் இல்லை என்பதை குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வீடு முழுக்க தாய், தங்கையின் கண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. கரூர் துயர சம்பவத்தில் இதுவரை 41 பேர் உயிர் இழந்து விட்டனர். இன்னும் 60 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிலும் சிலர் நிலை கவலைக்கிடமாக இருப்பது பதற வைக்கிறது. குடும்ப தலைவனையும், அந்த பொறுப்பை ஏற்ற மகனையும் இழந்து இடிந்து நிற்கும் குடும்பத்துக்கு அரசியல் தலைவர்களும், ஆர்வலர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நிதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நேரில் வந்து ஆறுதல் கூறினார். #KarurStampede #TVKVijay #viralvideo #RaviKrishnana #ArunaJagdeesan #groundreport #TVKVijayKarurStampede #StampedeAlert #KarurNews #BreakingNews #VijayUpdates #TamilNaduNews #SafetyFirst #EventSafety #TragicEvent #CrowdControl #Awareness #CommunitySupport #LocalNews #KarurUpdates #VijayCommunity

செப் 29, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sudha
செப் 29, 2025 18:23

இந்த விடியோவை ஆளும்கட்சி டிவி சேனல் அனைத்திலும் ஒளி பரப்பட்டும். ஆளும்கட்சி ஐயோ என்று போக கடைசி சான்ஸ்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை