7 மாதங்களாக மாணவியை சீரழித்த வாலிபால் கோச் கைது | Volleyball coach | +2 Girl student | Sexual haras
நாகை வேதாரண்யம் அடுத்த தோப்புத் துறையை சேர்ந்தவர் முகமது கலிலூர் ரகுமான். வயது 34. சிறுவர் சிறுமிகளுக்கு வாலிபால் கற்று தருகிறார். 7 மாதங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு மாணவர்களை அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி வாலிபால் விளையாடியதை பார்த்த ரகுமான், அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். உனக்கு நிறைய திறமை இருக்கிறது; என்னிடம் பயிற்சி பெற்றால் மாநில அளவில் வெற்றி பெறலாம் என கூறியுள்ளார். மாணவியும் மாநில அளவில் சாதிக்கும் ஆசையில் வாலிபால் கோச் பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் சம்மதித்ததால் மாணவியை பல்வேறு ஊர்களுக்கு போட்டியில் கலந்து கொள்ள ரகுமான் ழைத்துச் சென்றுள்ளார். அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்து செல்வதால் பெற்றோர்களுக்கு வாலிபால் கோச் மீது சந்தேகம் எழுந்தது. மகளை வாலிபால் கோச்சரோடு அனுப்புவதை நிறுத்தினர். ரகுமான் மீண்டும் மீண்டும் பெற்றோருக்கு போன் செய்து போட்டி இருப்பதாக அழைத்தும், மகளை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் ரகுமான் 1098 எனும் சைல்டு லைன் எண்ணிற்கு போன் செய்து நன்றாக விளையாடும் மாணவியை அவரது பெற்றோர் போட்டிக்கு அனுப்பாமல் துன்புறுத்துவுதாக புகார் அளித்துள்ளார். குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் இதுபற்றி மாணவியின் பெற்றோரிடம் விசாரித்தனர்.