ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக தாசில்தார் மீது விஆர்ஓ புகார் | Tahsildar caught | VRO home | Sexual h
ஆந்திராவின் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை மண்டலம் வகாடு தாசில்தாராக இருப்பவர் ராமையா. இதற்கு முன் பெல்லக்கூர் தாசில்தாராக பணியாற்றினார். அப்போது அங்கு கிராம வருவாய் அதிகாரியாக இருக்கும் பெண் விஆர்ஓ மீது ராமையாவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை அடையும் நோக்கில் பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த சூழலில்தான் ராமையா திடீரென வகாடுக்கு மாற்றப்பட்டார். அலுவலகம் மாறினாலும் அந்த பெண் விஆர்ஓ வை ராமையா விட்டபாடில்லை. அந்த பெண்ணின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி, நிர்வாணமாக வீடியோ கால் செய்து டார்ச்சர் கொடுத்துள்ளார். நான் உன் வீட்டிற்கு வந்தால் சிக்கன் சமைப்பாயா? நான் கேட்டதை தருவாயா? என்று ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்தவர், சொன்னதுபோலவே புதன்கிழமை இரவு அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லை என நினைத்து பெண் விஆர்ஓ அறைக்கு சென்று நிர்வாணமாக நின்றுள்ளார். ஏத்கனவே விஷயத்தை தனது தாயிடம் கூறியிருந்த விஆர்ஓ, தாசில்தார் ராமையா தனது அறைக்குள் வந்து ஆடைகளை கழற்றியபோது, தாயை அழைத்துள்ளார். அங்கு வந்த வி.ஆர்.ஓ. தாய், தாசில்தார் ராமையாவை துடைப்பத்தால் வெளுத்து வாங்கினார். இதை எதிர்பாராத தாசில்தார், அவசர அவசரமாக பேன்ட்டை மட்டும் போட்டுக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தாசில்தார் ராமையா தரப்பில் விசாரித்தபோது, ராமையா பெல்லக்கூர் தாசில்தாராக பணியாற்றியபோது, இருவருமே பழகி வந்ததாகவும், அந்த பழக்கம் திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ராமையா வகாடுக்கு மாற்றப்பட்ட பிறகு இருவருக்கும் இடையே இடைவெளி வந்துவிட்டதாகவும், தன்னை தேடி வந்த தாசில்தாரை, பெண் வி.ஆர்.ஓ. தாயை வைத்து தாக்கியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.