முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அறப்போர் இயக்கம் | Walltax Road | TN Scam | Central Station
இதோ இந்த ரோட்ட பாருங்க. சென்னைல பலரும் இந்த ரோட்ல பயணிச்சிருப்பீங்க. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கும் இந்த பகுதி. சுதந்திரத்துக்கு முன்னாடி, ஒரு பொழுதுப்போக்கு மையமா இருந்தச்சு. உப்புமூட்டைகள் ஏத்திக்கிட்டு டிராம்கள்(Tram) வந்து போன பகுதியாவும் இருந்துச்சு. 1772ம் ஆண்டில் இந்த ரோட்ட ஒட்டி, ஒரு சுவரை எழுப்புச்சு ஆங்கிலேய அரசு. இணைப்பு வசதிக்காக, சுவரின் உள் பக்கதுல 50 அடி சாலையும் போட்டாங்க. சாலை பணிகள் முடிஞ்சதும், அதோட செலவை பொதுமக்கள் மீது வரியாக சுமத்த ஆங்கிலேயர் முடிவு செஞ்சாங்க. ஆனால் அப்பவே அத கொடுக்க மக்கள் மறுத்துட்டாங்க. ஆங்கிலேயர் எவ்வளவு போராடி பார்த்தும் வரி வசூல் செய்ய முடியல. இப்படி பல வரலாறுகளை சுமந்த இந்த இடத்துக்குதான், வால்டாக்ஸ்(WALLTAX) ரோடு அப்டின்னு பெயர் வந்துச்சு. இந்த பழைய வரலாற்றை விட, தமிழக அரசு செஞ்சிருக்க ஒரு விஷயம் தான் வரலாற்றுல இடம்பெறும் போல.