உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வக்பு வாரிய உத்தரவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு | Waqf Council | Waqf Board

வக்பு வாரிய உத்தரவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு | Waqf Council | Waqf Board

மசூதிகளில் ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று சிறப்பு தொழுகைகள் நடக்கும். அப்போது இமாம் அல்லது முத்​தவல்​லிகள் இஸ்லாமிய சொற்​பொழிவு ஆற்று​வார்​கள். சொற்பொழிவுக்கு இனி அனுமதி அவசியம் என சத்தீஸ்கர் வக்பு வாரியம் கூறி​யுள்ளது. இது குறித்து சத்தீஸ்கர் வக்பு வாரிய தலைவர் சலீம் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மசூ​தி​களில் தொழுகைக்கு பின் சொற்​பொழி​வாற்ற இனி வக்பு வாரி​யத்​தின் அனுமதி அவசி​யம். மீறு​பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்​கப்​படும். சொற்​பொழி​வு​களின் போது சில கருத்துகள் சர்ச்சையாக இருப்பதாக கூறப்படு​கிறது. இதனால் மக்கள் மத்தி​யில் தவறான கருத்து விதைக்கப்படுகிறது. மதக்​கல​வர​ம் உருவாகும் என அஞ்சப்​படு​கிறது. இதை தவிர்த்து சொற்பொழிவின் போது சிறு​பான்​மை​யினருக்கான அரசு திட்​டங்கள் பற்றி எடுத்துரைக்​கலாம். மசூதிகள் மற்றும் தர்காக்​களில் கருத்து பரிமாற்றம் எல்லை மீறுவதை வக்பு வாரியம் விரும்பவில்லை என சலீம் ராஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநில மசூதி​களி​லும் அமல்படுத்த வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சலீம் ராஜ் கடிதம் எழுதி​யுள்​ளார்.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ