மழைநீர் தேங்கினால் முகாமுக்கு போங்க: அதிகாரிகள் அலட்சிய பதில்|Water Stagnation|SewageContamination
திருவள்ளூரில் கடந்த வாரத்தில் கனமழை கொட்டியது. செவ்வாபேட்டை கேடிஜெ நகர், அநெக்ஸ் பகுதியில் வெள்ளம் தேங்கியது. மழையின் ஓய்ந்து 10 நாட்களாகியும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழை நீருடன் கழிவு நீர் கலந்து நாற்றம் அடிப்பதால் மக்கள் அவதி அடைந்தனர். மாவட்ட கலெக்டர் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர். வீடுகளை சுற்றி வெள்ளம் தேங்கி இருப்பதால் வெளியே செல்ல முடியவில்லை. குழந்தைகளை சரியாக பள்ளிக்கு அனுப்பி 10 நாட்கள் ஆகிறது. அத்தியாவசிய பொருள் வாங்க கூட முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினர். மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். மழை நீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.