காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு! hogenakkal falls| Waterflow increase | Dharmapuri
தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான வயநாடு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 4 ஆயிரத்து 554 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை வறண்டு இருந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4000 கன அடி நீர் வரத்து உள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.