வயநாட்டில் அலறியபடி ரோட்டுக்கு ஓடி வந்த மக்கள் | Wayanad | Earthquakes Wayanad
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, மேப்பாடு, முண்டக்கை ஆகிய 3 இடங்கள் உருக்குலைந்து போயின. நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோரை காணவில்லை. உறவுகளை இழந்து வயநாடு மக்கள் தவித்து வந்த நிலையில் இன்று காலை இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட நென்மேனி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து வீட்டில் இருந்து வெளியேறி ரோட்டுக்கு வந்தனர். நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் கூறியதை அடுத்து அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் இடம் மாற்றினர். பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் அதிர்வு காரணமாக அலாரம் ஒலித்தது. பயங்கர சத்தத்துடன், அதிர்வை உணர்ந்ததாக மக்கள் கூறினர்.