/ தினமலர் டிவி
/ பொது
/ பேரிடர் மீட்பு படை சொல்வது என்ன? வயநாட்டில் திக் திக் | Wayanad | Red Alert | IMD
பேரிடர் மீட்பு படை சொல்வது என்ன? வயநாட்டில் திக் திக் | Wayanad | Red Alert | IMD
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நிலச்சரிவு நடந்த வாயநாடு புஞ்சிரிமட்டம், முண்டக்கை , சூரல்மலா மற்றும் வெள்ளரிமலா பகுதியில் பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இடிந்த பகுதிகளில் மீட்பு பணிக்கு பயன்படுத்தும் கருவிகளுடன் 5 குழுவினர் வயநாடு பகுதியில் முகமிட்டுள்ளனர்.
டிச 02, 2024