உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு போல நீலகிரிக்கும் காத்திருக்கிறது ஆபத்து wayanad land slide|kerala

வயநாடு போல நீலகிரிக்கும் காத்திருக்கிறது ஆபத்து wayanad land slide|kerala

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 480 க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர். பேரிடர் மீட்பு குழு, ராணுவம், விமானப்படையினர் மீட்பு பணியை தொடர்ந்து வருகின்றனர். நிலச்சரிவு பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், வயநாடு மற்றும் அதன் அருகே உள்ள மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதியில் 48 மணிநேரத்தில் 57 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ