/ தினமலர் டிவி
/ பொது
/ வயநாடு பீதியால் கேரளாவில் பூதாகரமான பெரியாறு புரளி | Wayanad Landslide | Mullaiperiyar Dam fake news
வயநாடு பீதியால் கேரளாவில் பூதாகரமான பெரியாறு புரளி | Wayanad Landslide | Mullaiperiyar Dam fake news
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின், முல்லை பெரியாறு அணை விவகாரம் கேரளாவில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அணை உடைந்து விடும்; புதிய அணை கட்ட வேண்டும் என பல தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மீண்டும் அணை உடைவது போன்ற அனிமேஷன் வீடியோ பரவுகிறது. இதனால் இடுக்கி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரள அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இடுக்கி கலெக்டர் அலுவலகத்தில் பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை கூட்டம், நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் நடந்தது.
ஆக 13, 2024