/ தினமலர் டிவி
/ பொது
/ நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்போன்கள் | Cell Phones | Wayanad | Landslides
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்போன்கள் | Cell Phones | Wayanad | Landslides
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள், வீடுகளை இழந்தவர்கள், மண்ணிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் 80 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே இரவில் உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டனர். செல்போன்கள் தொலைந்ததால் உறவினர்களை தொடர்புகொள்ள கூட முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மலப்புரத்தை சேர்ந்த சிராஜ் என்ற இளைஞரும் அவருடைய 10 நண்பர்களும் சேர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் இலவசமாக வழங்கினர். இதனால் முகாம்களில் தங்கி இருப்போர் அவர்களின் உறவினர்கள், நண்பர்களிடம் பேச முடிந்திருக்கிறது.
ஆக 02, 2024