/ தினமலர் டிவி
/ பொது
/ உயிரை பணயம் வைத்து வீரர்கள் மீட்கும் காட்சிகள் | Indian Air Force helicopters | Wayanad landslide
உயிரை பணயம் வைத்து வீரர்கள் மீட்கும் காட்சிகள் | Indian Air Force helicopters | Wayanad landslide
சுற்றியும் சேறு! சவால்களை தாண்டி வயநாட்டில் இறங்கிய விமானப்படை கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 1000 பேருக்கும் மேல் மாயமாகி இருப்பதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் நடக்கிறது. விமானப்படையின் 2 விமானங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய போலீஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு, கோழிக்கோடு பகுதிகளுக்கு தடவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர்.
ஜூலை 30, 2024